Newsபுலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஆஸ்திரேலியா

புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஆஸ்திரேலியா

-

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், தொழிலாளர்கள் பற்றாக்குறையை தவிர்க்க, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

இதற்காக 20 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு வேலை தேட உதவுவதற்காக மேலும்14 மில்லியன் டொலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கத்தின் பத்தாண்டு பணியாளர் திட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி கன்பராவில் தொடங்கும் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மாநாட்டில் தனது திட்டத்தை முன்வைக்க மாநில முதல்வர் தயாராகி வருகிறார்.

மாநில அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2025 வரையிலான காலகட்டத்தில் குயின்ஸ்லாந்தின் வேலைகள் சுமார் 280,000 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குயின்ஸ்லாந்து பொருளாதாரத்தில் தொழிலாளர்களை விட தற்போது அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதாக மாநில பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மற்றொரு திட்டம் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சர்வதேச மாணவர்கள் வேலை தேடுவதற்கு $5.6 மில்லியன் ஒதுக்கும்.

Latest news

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...