2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
வரி அதிகரிப்பை மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வற் வரியை 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி அறிவித்த முக்கிய விடயங்கள்
*வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
*வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்
*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்
*சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை.
*அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.
தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்
*வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
*வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்
*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்.
*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும். தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும். என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.