Newsஇலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

-

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதற்கமைய, 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இது பொருந்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

05 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் எத்தனை சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு பயணிக்க கூடிய வகையில் இந்த வீசா வழங்கப்படும்.

இதன் மூலம் இலங்கையில் அதிகபட்சமாக 6 மாதங்கள் ஒரே நேரத்தில் தங்க முடியும். இதற்கு முன்னர் 30 நாட்களுக்கு மாத்திரமே இந்த விசா மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையால் வழங்கப்பட்ட ஒரு வருட பல நுழைவு விசாவிற்கும் 06 மாதங்களுக்கு வழங்கப்படும் ஒற்றை நுழைவு வீசாவிற்கும் மேலதிகமாக இந்த புதிய வீசா வழங்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

இந்த வாரம் சிட்னியில் போலீஸ் பலத்த பாதுகாப்பு

சிட்னியில் போராட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், இந்த வாரம் போராட்டங்களை நடத்த ஆர்வலர்கள் குழு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, நீண்ட கை துப்பாக்கிகளை ஏந்தி, நகருக்கு...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...