Breaking Newsஆஸ்திரேலியாவில் முழுமையாக தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்!

ஆஸ்திரேலியாவில் முழுமையாக தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்!

-

ஆஸ்திரேலியாவில் மீதமுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் அடுத்த சில மணிநேரங்களில் நீக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று நடைபெறும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளமையே இதற்குக் காரணம்.

தற்போது 07 நாட்களாக இருக்கும் தனிமைப்படுத்தல் காலத்தை 05 நாட்களாக குறைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் பொதுவான உடன்பாட்டை எட்டுவது மிகவும் முக்கியம் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சமீபத்தில் கூறினார்.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைக் குறைப்பதைத் தவிர, மற்ற கோவிட் விதிமுறைகளை மேலும் திருத்தங்களுடன் பராமரிப்பது முக்கியம் என்று பல சுகாதார சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

விமானங்களில் முகக் கவச பயன்பாடு மற்றும் தடுப்பூசி தேவைகள் ஆகியவை இதில் அடங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

Latest news

மாணவர்களுக்கான பிரபலமான சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ள பள்ளி

குயின்ஸ்லாந்தில் உள்ள ஆண்கள் கல்லூரியான St Edmund’s கல்லூரி விதித்த புதிய சிகை அலங்கார விதிகள், பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளி பருவம்...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

Ampol-இன் முடிவால் எரிபொருள் விலை உயருமா?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான Ampol, EG ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 500 சேவை நிலையங்களை கையகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Ampol-இன் முடிவால் எரிபொருள் விலை உயருமா?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான Ampol, EG ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 500 சேவை நிலையங்களை கையகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் அல்பானீஸ்

Bondi பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேசிய துக்க தினத்தில் உரையாற்றும் போதே அவர்...