சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 92. ஸ்டாலினின் இரும்புத் திரைகளை நீக்கியதாக புகழ் பெற்றவர் கோர்பச்சேவ். சோவியத்தின் கடைசி தலைவர் என்றும் அழைக்கப்படுகிறார்.
1985 முதல் 91 வரை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த அவர் தமது 1990 முதல் 91 வரையிலான ஆட்சிக் காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து ரஷ்யாவை புதிய பாதையில் திருப்பி விட்டார்.
ஆனால் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டார்.