மெல்போர்னில் பெண்களின் கைப்பை திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதனால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னின் கிழக்கில் உள்ள Blackburnஇல் உள்ள ஒரு வீட்டில் சில நாட்களுக்கு முன்பு 250,000 டொலர்கள் மதிப்புள்ள கைப்பைகள் திருடப்பட்டுள்ளன.
50 நகைகள் மற்றும் பெறுமதியான கைப்பைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதே பகுதியில் இருந்து 50,000 டொலர் மதிப்புள்ள கைப்பைகள் திருடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த கைப்பைகள் பின்னர் மற்றொரு பெண்ணின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.