முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைமறுதினம் நாடு திரும்பவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஜனாதிபதி பதவியிலிருந்த கோட்டாபய, கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட மாபெரும் மக்கள் எழுச்சியால் ஜூலை 13 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறினார்.
மாலைதீவு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இருந்து ஜூலை 14 ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் இராஜிநாமாக் கடிதத்தை அனுப்பிவைத்தார்.
அதன்பின்னர் அவர் அண்மையில் தாய்லாந்து சென்றார். இந்நிலையிலேயே கோட்டாபய நாளை நாடு திரும்புகின்றார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை வரும் கோட்டாபயவுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்குரிய சகல சிறப்புரிமைகளும் அவருக்குக் கிட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.