ஆஸ்திரேலியா தினத்தை (Australia day) மாற்றுவது தொடர்பாக மத்திய அரசாங்கத்திடம் மெல்போர்ன் நகர சபை உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளது.
குடியுரிமை வழங்கும் விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்கள் ஜனவரி 26ஆம் திகதி அன்று தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா தினத்தை வேறு திகதியில் கொண்டாட வேண்டும் என்பது அவர்களின் பரிந்துரையாகும்.
மெல்போர்ன் நகரவாசிகள் மற்றும் நகரத்தில் நிறுவப்பட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்த 1,600 பேரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் மெல்போர்ன் நகர சபை இந்த முடிவை எடுத்துள்ளது.
அங்கு, கிட்டத்தட்ட 60 சதவீத மக்கள் ஆஸ்திரேலியா தினத்தை ஜனவரி 26 அல்லாத வேறு நாளில் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எனினும், இது தொடர்பாக இறுதி முடிவை மத்திய அரசாங்கம் தான் எடுக்க வேண்டும்.
மெல்போர்ன் நகர சபை அடுத்த செவ்வாய் இரவு மீண்டும் கூடி இது குறித்து விவாதிக்கும் என அறிவித்துள்ளது.