ஆஸ்திரேலியாவில் முட்டை தொடர்பான புதிய முடிவால் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், விலை ஏற்றம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கூண்டுகளில் வைக்கப்படும் கோழிகள் இடும் முட்டைகள் 2036ஆம் ஆண்டுக்குள் விற்க முடியாது என்று தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
எப்படியிருப்பினும், ஆஸ்திரேலிய முட்டை உற்பத்தியாளர்கள் புதிய முறைக்கு திரும்புவதற்கு இந்த நேரம் போதாது என்று வலியுறுத்துகின்றனர்.
குறைந்தபட்சம் 2046ஆம் ஆண்டு வரை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கூண்டு முட்டைகள் என்று கூறப்படுகிறது.
பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் முட்டைகளில் 40 சதவீதம் அந்த முட்டைகள்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.