Newsமீண்டும் நாடு திரும்பிய கோட்டாபய - பாதுகாப்பு தீவிரம்

மீண்டும் நாடு திரும்பிய கோட்டாபய – பாதுகாப்பு தீவிரம்

-

கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வந்த மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்‌ஷ, அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 13ஆம் திகதி அதிகாலை, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

73 வயதான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது மனைவி அயோமா ராஜபக்‌ஷ மற்றும் 2 பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் நாட்டை விட்டுச் சென்றிருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலைதீவின் மாலி நகருக்கு செல்வதற்காக விமானப்படை விமானமொன்று அவர்களுக்கு வழங்கப்பட்டதாக, இலங்கை விமானப்படை அறிவித்திருந்தது.

மாலைதீவு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.

சிங்கப்பூர் சென்ற அவர், அங்கு தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்தார்.

சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி பெற்றிருந்த நிலையில், அக்காலக் கெடு நிறைவடைந்த நிலையில் மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

சுமார் 4 வாரங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த அவர், கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சுமார் 3 வாரங்கள் தாய்லாந்தில் தங்கியிருந்த அவர், நேற்று (02) இரவு 11.48 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான SU-468 எனும் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், கோட்டாபய ராஜபக்‌ஷவை வரவேற்க விமான நிலையத்தில் ஒரு சில அமைச்சர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...