முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் .
“எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் தீர்மானிக்க வேண்டும்.
அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை,” எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி தனது முடிவை அறிவித்தவுடன் கட்சியின் நிர்வாக சபைக்கு அறிவிப்போம். அவருக்கு இலங்கையில் வசிக்கவும், அரசியலில் ஈடுபடவும் அனைத்து உரிமைகளும் இருக்கின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.