கனடாவில், மத்திய மாகாணமான சஸ்காட்செவன் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.
ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ மற்றும் வெல்டன் மாகாணங்கள் உட்பட 13 வெவ்வேறு இடங்களில் இருந்து கத்தி தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது மிக பயங்கரமான கத்திக்குத்து தாக்குதல் என பொலிஸ் மா அதிபர் ரோண்டா பிளாக்மோர் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இரு சகோதரர்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் விளக்கமளித்துள்ளார்.
31 வயதான டாமியன் சாண்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சாண்டர்சன் என அழைக்கப்படும் சந்தேக நபர்கள் தற்போது பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்தின் பேரில் இருவரையும் கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களும் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் எனவும், அவர்களிடம் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். சஸ்காட்செவன் பகுதியில் வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அவர்கள் ஏன் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்பதை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.