Newsஉக்ரேன் போர்க்களத்தில் ஆஸ்திரேலியர் பலி

உக்ரேன் போர்க்களத்தில் ஆஸ்திரேலியர் பலி

-

உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.

ஜெட் வில்லியம் டனகே செலுத்திக்கொண்டிருந்த மருத்துவ வாகனத்தை ரஷ்ய படையினர் இலக்குவைத்தனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜெட் தனது வாழ்நாளில் ஏனையவர்களிற்கு உதவ முயன்றார் நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடியதை விட அதிக உதவிகளை அவர் குறுகிய காலத்தில் செய்தார் என குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் உலகின் பல பகுதிகளிற்கு சென்றுள்ளார் உலகம் முழுவதும் நண்பர்கள் உள்ளனர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனில் உள்ள அவரது சகாக்கள் ஜெட்டினை தங்கள் அணியின் முதுகெலும்பு என வர்ணித்துள்ளனர் தாங்கள் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை வைக்ககூடிய நபர் என வர்ணித்துள்ளனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவிற்கான உக்ரேனின் தூதுவரும் கொல்லப்பட்டவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...