முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எடுத்த தவறான தீர்மானம் காரணமாகவே பெரும்போகச் செய்கை உற்பத்தி பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் எடுத்த கொள்கை தீர்மானம் தவறானது அல்ல. ஆனால் அந்த கொள்கையை ஒரேயடியாக செயற்படுத்தியமையே தவறாகும். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தமையால், இந்த கருத்துக்களை அப்போது தாம் கூறவில்லை.
கோட்டாபய ராஜபக்ச, இரசாயன உரத்தை தடை செய்ய முடிவெடுத்தபோது, அதனை தாம் எதிர்த்ததாக குறிப்பிட்ட மஹிந்தாநந்த,எனினும் அது தமது விவசாய அமைச்சுக்கு பொறுப்பானது அல்ல.
அதற்கு முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச பொறுப்பாக இருப்பார் என்றும் சுகாதார அமைச்சும், ஜனாதிபதி செயலணியும் இவற்றை கண்காணிக்கும் என்றும் கோட்டாபய என்னிடம் கூறிார்.
எனவே தமது அமைச்சின் கீழ் இந்த விடயம் வராததன் காரணமாக, நான் அதில் தலையிடவில்லை.
எனினும் இறுதியில் கோட்டாபய ஜனாதிபதிக்காக தாம் இந்த பிரச்சினையில் அதிகமாக பழிச்சொல்லுக்கு உள்ளானது.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி எடுத்த தீர்மானம் காரணமாகவே இலங்கையில் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டமைக்கான காரணம், 2015ஆம் ஆண்டுக்காலத்தில் இருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாகும்.
இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் ஏற்பட்ட விளைவுகளை காணப்பதற்கு இன்னும் சில காலம் செல்லும்” என்று மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்தார்.