Newsசிட்னியில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு - வெளிவரும் முக்கிய...

சிட்னியில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு – வெளிவரும் முக்கிய தகவல்கள்

-

சிட்னியில் இந்திய பெண் ஒருவர் வானளாவிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 27 வயதான இந்திய பட்டய கணக்காளர் ஐஸ்வர்யா வெங்கடாச்சலம் எர்னஸ்ட் அண்ட் யங்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐஸ்வர்யா இறப்பதற்கு முன்பு அருகிலுள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் ‘கண்களை மூடிக்கொண்டு அழுதார்’ என்று சாட்சிகளின் படி, பத்திரிக்கை அறிக்கைகள் கூறுகிறன. .

இவர் தனது கல்வியை இந்தியாவில் முடித்த பின் கணவர் நகுல் என்பவரை ஜனவரி 2021 இல் சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.

அவர் திருமணமாகி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். சிட்னியில் மூத்த தணிக்கையாளராக ஈ.ஒய்எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் நவம்பர் 2021 இல் பணியில் சேர்ந்தார்.

தான் வேலையில் கொடுமைப்படுத்துதல் மற்றும் இனவெறியைக் கையாள்வதாகக் கூறினார் என அவரது தோழி தெரிவித்துள்ளார்.

ஆனால், எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் இனவாதம் ஆகியவற்றிற்கு தமது நிறுவனம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக் கொண்டுள்ளது, எனக் கூறினார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...