மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக நேற்று இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள பல கட்டிடங்கள் ஊதா நிறத்தில் மின்னியுள்ளது.
மெல்போர்ன் MCG ஸ்டேடியம் -Flinders Street நிலையம்- சிட்னி ஓபேரா ஹவுஸ் ஆகியவை அவற்றில் அடங்கும்.
விக்டோரியா பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸின் அறிக்கையில், ராணியின் சேவையை கௌரவிக்க அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று கூறினார்.
இதற்கிடையில், நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் டொமினிக் பெரோட்டும் ராணியின் பணியை பாராட்டினார்.
சிட்னி ஓபரா ஹவுஸ் அதிகாரப்பூர்வமாக 1973 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத் II அவர்களால் திறக்கப்பட்டது, அவர் அந்த நேரத்தில் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.