இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து அரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்த பல தகவல்கள் பகிரங்கமாகியுள்ளன.
அதற்குக் காரணம் ஆஸ்திரேலியா உட்பட 15 நாடுகள் இன்னும் பிரித்தானிய மகுடத்தின் கீழ் உள்ளன.
மேலும் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் பற்றிய சமீபத்திய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1966ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் படித்தவர் என்பது சிலருக்குத் தெரியாது. மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 02 பாடசாலை செமஸ்டர்கள் இந்த நாட்டிற்கு வந்த அவர் மெல்பேர்னில் உள்ள Geelong Church of England Grammar பாடசாலையில் கல்வி பயின்றார்.
வேல்ஸ் இளவரசராக ஆன பிறகும் அவர் பலமுறை ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார்.