இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து எதிர்வரும் 22ஆம் தேதியை பொது விடுமுறையாக அரசாங்கம் திடீரென அறிவித்திருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடைகள் திறக்கும் நேரம் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக இதுவரை உரிய விளக்கம் கிடைக்கப்பெறவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, அந்தந்த விடுமுறை நாளில் கடைகள் திறக்கப்படுமா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் சில்லறை வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
இதற்கிடையில், விடுமுறையை அறிவிப்பது என்பது உண்மைகளை ஆராய்ந்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்ட முடிவு என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவின் அரச தலைவரின் மரணம் மற்றும் புதிய அரச தலைவர் நியமனத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.