Newsஆஸ்திரேலியாவுக்கு எலிசபெத் கைப்பட எழுதிய ரகசிய கடிதம் - 63 ஆண்டுகளாகியும்...

ஆஸ்திரேலியாவுக்கு எலிசபெத் கைப்பட எழுதிய ரகசிய கடிதம் – 63 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை

-

இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது கைப்பட ஆஸ்திரேலியா நாட்டுக்கு ரகசிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த 1986ஆம் ஆண்டு நவம்பரில் இந்த கடிதம் எழுதியுள்ளார். அதில், சிட்னி நகர மக்களின் முகவரியை குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.

எனினும், இந்த கடிதம் சிட்னி நகரில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் ஒன்றில் விலை மதிப்புடைய பொருட்களை வைக்க கூடிய அறையில் வைத்து பூட்டி பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி செவன் நியூஸ் ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணியின் தனிப்பட்ட ஊழியர் உள்பட ஒருவருக்கும் அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பது பற்றி தெரியாது.

ஏனெனில் அந்த கடிதம் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு விசயம் நிச்சயம். 2085-ம் ஆண்டு வரை அதனை திறந்து பார்க்க முடியாது. ஏனெனில், அந்த கடிதத்தில் சிட்னி நகர மேயரை குறிப்பிட்டு, வருகிற 2085-ம் ஆண்டு, நீங்கள் தேர்வு செய்ய கூடிய ஒரு நல்ல நாளில், தயவு கூர்ந்து இதனை திறக்கவும்.

அதில் உள்ள எனது செய்தியை சிட்னி நகர மக்களுக்கு தெரிவிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் எலிசபெத் ஆர் என எளிமையான முறையில் கையெழுத்து இடப்பட்டு உள்ளது.

Latest news

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...