Newsபூமியில் இருந்தபடியே நிலாவில் தங்கலாம் விரைவில்

பூமியில் இருந்தபடியே நிலாவில் தங்கலாம் விரைவில்

-

பூமியிலேயே நிலாவில் தங்க வாய்ப்பளிக்கக்கூடிய திட்டம் டுபாயில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அது குறித்து Arabian Business எனும் வர்த்தகச் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டது. கனடியக் கட்டடக் கலை நிறுவனமான Moon World Resorts 5 பில்லியன் டொலர் மதிப்புமிக்கத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

நிலாவின் தோற்றத்தில் அமையக்கூடிய அந்த உல்லாசத் தலம் விண்வெளிச் சுற்றுப்பயணத் தலமாகவும் விளங்கும் என்று கூறப்படுகிறது. விண்வெளி ஆய்வு நிலையங்கள் பயிற்சி நடத்துவதற்கும் வசதிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

உல்லாசத் தலத்திற்குச் செல்லும் வருகையாளர்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், இரவுக் கேளிக்கைக் கூடம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

உல்லாசத் தலத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியும் கட்டப்படும் என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 2.5 மில்லியன் வருகையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நிலாவின் தோற்றத்தைக் கொண்ட உல்லாசத் தலத்தை மற்ற இடங்களிலும் கட்ட Moon World Resorts எண்ணம் கொண்டுள்ளது. அதுகுறித்து உலகக் கண்காட்சி ஒன்றை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...