Newsஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை கிரிக்கெட் அணி

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை கிரிக்கெட் அணி

-

ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பையின் இறுதி போட்டி துபாயில் நடைபெற்றது. இதில், நாணய சுழற்சியல் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷங்கா, மெண்டீஸ் ஆகியோர் களமிறங்கினர். ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே மெண்டீஸும் 8 ஓட்டங்களில் நிஷங்காவும் ஆட்டமிழந்தனர்.

தனஞ்செயா டி சில்வா 28 ஓட்டங்களில் ஆட்டம் இழந்த நிலையில், குணாதிலக, ஷனகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், 58 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இலங்கை அணி பின் தங்கிய நிலையில் இருந்தது. எனினும் அடுத்ததாக களம் இறங்கிய பனுகா ராஜபக்சே அதிரடியாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அணியின் ஸ்கோர் 116 ரன்னாக இருந்த போது ஹசரங்கா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 170 ரன்கள் எடுத்தது.

171 ஓட்டங்கள் எடுத்தால் கோப்பை என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மதுஷன் பந்துவீச்சில் பாபர் அசாம் 5 ரன்களிலும் ஃபக்ஹர் ஜமான் ரன்கள் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 22 ரன்களுக்கு 2 விக்கெட் என பாகிஸ்தான் நெருக்கடிக்கு உள்ளானது. எனினும், முகமது ரிஸ்வான் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். 47 பந்துகளில் அரை சதம் கடந்த ரிஸ்வான் அடுத்த பந்திலேயே பிடி கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஹசரங்கா ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் விக்கெட் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

பெர்த்தில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள்கள் – ஓட்டுநர்கள் பலி

பெர்த்தின் மேற்கு புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். Wembley-இல் உள்ள Pangbourne தெருவுக்கு அருகிலுள்ள Grantham தெருவில் இரவு 10.50...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...