ஆஸ்திரேலியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 02 டொலர்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோலின் சராசரி விலை 1.60 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி முதல் பெற்றோல் வரிச் சலுகை நீக்கப்படவுள்ள நிலையில், எரிபொருளின் விலை கணிசமான அளவு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், ஸ்கொட் மொரிசன் அரசாங்கம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 சதம் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்தது.
06 மாதங்கள் அமுலில் இருந்த பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நீக்கப்படும்.