எதிர்வரும் வாரங்களில் ஆஸ்திரேலியாவில் திரவப் பாலின் விலை லிட்டருக்கு 20 முதல் 30 சதம் வரை உயரும் என்று சந்தை அறிக்கைகள் கணித்துள்ளன.
இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி செலவு அதிகரித்து சுமார் 350 மில்லியன் லிட்டர் உற்பத்தி குறைந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் திரவ பால் தொழில் பாதிப்படைந்து வருவதாக கால்நடைத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதே நிலை நீடித்தால் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பால் உற்பத்தி முற்றிலும் நின்றுவிடும் என எச்சரிக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய திரவ பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆஸ்திரேலியா முதல் 10 இடங்களில் சேர்க்கப்படவில்லை என்பதையும் சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.