ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக, ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அரசின் சார்பில், “Study ஆஸ்திரேலியா” என்ற கல்வி கண்காட்சி, சென்னை, வேளச்சேரியில் உள்ள உணவு விடுதியில் நடந்தது.
அதில், ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் கூறியதாவது:கொரோனா கட்டுப்பாட்டுக்குப் பின், ஆஸ்திரேலியாவில் உயர்கல்விக்கான சூழல் மிகவும் உகந்ததாக உள்ளது.
பொதுவாகவே ஆஸ்திரேலியா பலவகை கலாச்சாரத்துக்கு உட்பட்ட நாடு. அங்கு இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். இந்திய மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் வகையில், 1,200க்கும் மேற்பட்ட படிப்புகள் அங்கு உள்ளன.
மற்ற மேற்கு நாடுகளை விட குறைந்த செலவிலும், உதவித் தொகையுடனும் இந்திய மாணவர்கள் அங்கு கற்கலாம். அதற்கான வாய்ப்பு தற்போது கனிந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, https://www.studyaustralia.gov.au/india என்ற இணையதளத்தைக் காணலாம் இவ்வாறு அவர் பேசினார்.