உக்ரேனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ரஷ்யப் படைகள் அப்பகுதியை ஆக்கிரமித்ததில் இருந்து குறித்த இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கையர்கள் உக்ரேனில் கல்வி கற்கும் மாணவர்கள் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட இலங்கையர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கார்கிவ் பிராந்தியதின் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.