இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக ஆஸ்திரேலியா வழங்க ஒப்புக்கொண்ட மனிதாபிமான உதவியின் முதல் பகுதி நாட்டை சென்றடைந்துள்ளது.
22 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் அல்லது 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொருட்களை இலங்கை இவ்வாறு பெற்றுள்ளது.
அவை விரைவில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு வழங்கப்படும். உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 600 மெட்ரிக் தொன் அரிசி – சமையல் எண்ணெய் மற்றும் இதர உணவுப் பொருட்களை உள்ளடக்கிய இரண்டாவது உதவித் தொகையை இலங்கை விரைவில் பெறும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான 75 வருடகால நட்புறவை கருத்திற்கொண்டு இலங்கைக்கு இந்த உதவி வழங்கப்படுவதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன்ஸ் தெரிவித்துள்ளார்.