Biloela குடும்பம் என்று அழைக்கப்படும் நடேசலிங்கம் குடும்பத்தின் தாயார் பிரியா நடேசலிங்கம், ஆஸ்திரேலியாவில் தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் அனுபவங்களை புத்தகமாக எழுத நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 04 வருடங்களாக மெல்பேர்ன் – பேர்த் மற்றும் கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் கழித்த வாழ்க்கை பெரும்பாலும் அதன் அடிப்படையிலேயே அமைந்ததாக கூறப்படுகிறது.
இந்தப் புத்தகத்தை அச்சடித்து விநியோகிக்க ஏற்கனவே ஒரு புத்தக வெளியீட்டாளர் முன் வந்துள்ளார்.
இலங்கையில் நடந்த போரின் போது இலங்கையை விட்டு வெளியேறிய பிரியா மற்றும் நடேஸ் தம்பதிக்கு ஆஸ்திரேலியாவில் திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பின்னர், அவர்களை நாடு கடத்தும் முடிவும், அதைத் தடுக்கும் நீதிமன்ற நடவடிக்கையும் ஆஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டது.
தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, சில வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இந்நாட்டில் நிரந்தர குடியிருப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.