பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வரம்பற்ற வேலை நேர சலுகையை நீக்க ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி அடுத்த வருடம் ஜூன் 30ஆம் திகதி முதல் 02 வாரங்களுக்கு 40 மணித்தியாலங்கள் மட்டுமே என்ற வரம்பு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
இருப்பினும், அதுவரை, மாணவர் விசா வைத்திருப்பவர்கள், விடுமுறைக் காலங்களுக்கு வெளியேயும், எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய வாய்ப்பு உள்ளதுடன் படிப்பு தொடங்குவதற்கு முன்பே பணியமர்த்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், உயர் கல்விக்காக ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் படிப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது.
படிப்புகளில் பங்கேற்பதன் சதவீதம் திருப்திகரமான அளவில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதும் நினைவுகூரப்படுகிறது.
வேலை வழங்குநர்களும் பரிந்துரைக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் மேலும் தெரிவிக்கிறது.