ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா (Tasmania) மாநிலத்தின் மேற்குக் கடற்கரையில் சுமார் 230 பைலட் வகைத் திமிங்கிலங்கள் (pilot whales) கரையொதுங்கியுள்ளன
அவற்றில் சுமார் பாதி மட்டுமே உயிருடன் இருப்பதுபோல் தெரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏறக்குறைய ஈராண்டுகளுக்குமுன் அந்தப் பகுதியில் சுமார் 500 பைலட் திமிங்கிலங்கள் கரையொதுங்கின.
அவற்றில் சுமார் 100 திமிங்கிலங்கள் மட்டுமே உயிர்பிழைத்தன. திமிங்கிலங்கள் அதிக எண்ணிக்கையில் கரையொதுங்கியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இரைதேடி கரைக்கு மிக அருகில் வந்த பின்னர் வழிதவறியதால் அவை கரையொதுங்கியிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு நிபுணர்களும் திமிங்கிலங்களைக் காப்பாற்றும் கருவியுடன் ஊழியர்களும் சம்பவ இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.