எதிர்வரும் கோடை காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கான விசேட அறிவிப்பை வெளிவிவகார திணைக்களம் வெளியிட்டுள்ளது.
புதிய கடவுசீட்டிற்கு விண்ணப்பித்தாலோ அல்லது கடவுசீட்டை புதுப்பிப்பதாலோ, இப்போதே செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
கடவுசீட்டுகளை செயலாக்குவதில் ஏற்கனவே கடும் தாமதம் ஏற்படுவதே இதற்குக் காரணமாகும்.
செப்டம்பர் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு சுமார் 12,000 கடவுசீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன, ஆனால் தற்போது அது சுமார் 15,000 ஆக அதிகரித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு, அது 7,000 முதல் 9,000 வரை இருந்தது.
இம்மாதம் இதுவரையில் 160,000 புதிய கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 02 இலட்சத்தை அண்மித்துள்ளது.