சிட்னியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நிலைமையை தீர்ப்பதற்கு ஆஸ்திரேலியா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிவில் செயற்பாட்டாளர்களை ஒடுக்க தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து இலங்கை சமூகம் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருந்தது.
பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் குறித்து நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகள் அடங்கிய அறிக்கை உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அடுத்த பாராளுமன்ற அமர்வில் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சிட்னியில் உள்ள இலங்கை சமூகமும் இலங்கையின் நிலைமை தொடர்பில் நேரடியான தலையீடுகளை கோரியுள்ளது.
மாநில அரசு மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் முழு அர்ப்பணிப்பை அளிப்பதாக உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சந்திக்க சிட்னி இலங்கை சமூகம் தயாராகி வருகின்றது.