அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி கணிசமாக அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆசிய நிதிச் சந்தை வெளிநாட்டு நாணய பெறுமதி அறிக்கையின்படி ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி 4 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நிதி அமைச்சு அதிகாரிகள், பெருமளவில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனைப் பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு வரிச்சலுகை வழங்கும் திட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து நாட்டின் நிதிச் சந்தையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதால், ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.