ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்தி சேமிப்பு வசதி விக்டோரியாவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
1.7 பில்லியன் டொலர் செலவில் மாநிலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எரிசக்திப் பொதியில் இதுவும் உள்ளடங்குவதாக மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டுக்குள் 2.6 ஜிகாவாட் திறன் இங்கு சேமிக்க திட்டமிடப்பட்டு 2035ஆம் ஆண்டுக்குள் அதை 6.3 ஜிகாவாட்டாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் 12,700 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என விக்டோரியா பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
முக்கிய திட்டத்துடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பல திட்டங்களும் தொடங்கப்படும்.