புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வரும் மக்களுக்காக தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிய புகலிட மையம் ஒன்று நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்குவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதியோர் பராமரிப்பு நிலைய கட்டிடம் அகதிகள் மையமாக மாற்றப்பட்டு 39 அகதிகள் 6 வாரங்கள் அங்கு தங்கலாம்.
புகலிடம் கோரி வரும் மக்கள் தற்போது ஹோட்டல்களுக்கு அனுப்பப்படுவதையும் அதற்கு அதிக பணம் செலவாகும் என்பதையும் கருத்தில் கொண்டு தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கிடையில், தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கமும் அகதிகளுக்காக 177 மில்லியன் டொலர் செலவில் 400 புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது.