ஆஸ்திரேலியாவில் எரிவாயு விலை குறைவதற்கான அறிகுறிகள் உள்ளன.
ஆஸ்திரேலிய மத்திய அரசுக்கும் எரிவாயு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய ஒப்பந்தமே இதற்குக் காரணம்.
உலக சந்தை விலையை விட குறைந்த விலையில் எரிவாயுவை வாங்க ஆஸ்திரேலிய நுகர்வோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என இயற்கை வளத்துறை அமைச்சர் Madeleine King தெரிவித்துள்ளார்.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் சந்தைக்கு வழங்கப்படும் எரிவாயுவின் அளவை நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும்.
அதன்படி, எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எரிவாயுவின் விலை 6-10 டொலர்களுக்கு இடையில் குறையாது எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.