ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் மின்சார தடையால் தவித்துள்ளார்கள்.
உணவு விநியோகம் செய்யும் ஆளில்லா விமானம் மின் வலையமைப்பில் மோதியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை பிரவுன்ஸ் ப்ளைன்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு பிரிஸ்பேனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் இவ்வாறு மின்சார தடையால் பாதிக்கப்பட்டார்கள்.
குறித்த சம்பவம் முதல் முறை இடம்பெற்றுள்ளதாக மின் வலையமைப்பிற்கு பொறுப்பான குயின்ஸ்லாந்து எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மின் வலையமப்பு நிறுவனம் 2,000 பேருக்கு 45 நிமிடங்களில் மின் தடையை சரி செய்துள்ளது.
இருப்பினும் ஆளில்லா விமானம் மோதிய இடத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு பிறகே மின்சாரம் கிடைத்துள்ளது.
சிரமத்திற்கு வருந்துகிறோம். நாங்கள் தற்போது நேற்றைய நிகழ்வை மதிப்பாய்வு செய்து வருகிறோம், ” என உணவு சேவை தெரிவித்துள்ளது.