Whatsapp மற்றும் Signal போன்ற செயலிகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை சோதனையிட முடியும் என்று அட்டர்னி ஜெனரல் மார்க் ட்ரபஸ் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு தேவையான ஏற்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசியல்வாதிகளின் Whatsapp தகவல்களை சரிபார்க்கவும் ஒட்டுக்கோர்க்க மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான அலுவலகங்களைத் தேடவும் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தரவுகளை வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி எச்சரித்திருந்தது.
இருப்பினும், அட்டர்னி ஜெனரல் மார்க் ட்ரபஸ் அத்தகைய ஆபத்து இல்லை என்று வலியுறுத்துகிறார்.