ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை குறித்த புதிய பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்துள்ளன. பிரேரணைக்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 20 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.
‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று 06 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.