Breaking Newsஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் - Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

-

ஆஸ்திரேலியாவில் செயல்படும் சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு நிறுவனமான Singtelஇன் துணை நிறுவனத்தில் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது.

Singtel நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஊடுருவப்படுவது இது இரண்டாம் முறையாகும். அதன் தொடர்பில், Singtel நிறுவனத்தை இலக்காகக் கொண்டு அதன் மீது இணையத் தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

Singtel இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் Dialog எனும் தகவல்தொடர்புச் சேவை ஆலோசனை நிறுவனத்தை வாங்கியது. Dialog ஊடுருவப்பட்டதில் 20க்கும் குறைவான வாடிக்கையாளர்களும் சுமார் 1,000 தற்போதைய, முன்னாள் ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்ற மாதம் 10ஆம் தேதியன்றும் இம்மாதம் 7ஆம் தேதியன்றும் ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றன. அதில் Dialog நிறுவனத்தின் தரவுகளில் சிறிதளவு ஊடுருவப்பட்டு Dark Web எனும் ரகசிய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

Singtel நிறுவனத்தின் இன்னொரு துணை நிறுவனமான ஆஸ்திரேலியாவின் Optus நிறுவனமும் இணையத்தாக்குதலால் பாதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வரலாற்றில் இடம்பெற்ற ஆகப் பெரிய ஊடுருவல் சம்பவங்களில் அதுவும் ஒன்று. அதில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டன.

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...