மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 09 விமானங்கள் தாமதமாகி, கிட்டத்தட்ட 1000 பயணிகள் மீண்டும் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், திரையிடப்படாத நபர் ஒருவர் முனையத்திற்குள் நுழைந்ததையடுத்து, பிரச்சினை எழுந்ததாக அறிவித்தது.
அதன்படி, புறப்படவிருந்த விமானத்தில் பயணித்த குழுவினர் அதிலிருந்து இறக்கி மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் தாக்கம் காரணமாக இன்று மெல்போர்ன் மட்டுமின்றி பல விமான நிலையங்களிலும் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இன்று காலை அடிலெய்ட் விமான நிலையத்திலும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.