ஆஸ்திரேலியாவில் 03 வருடங்களில் விமான டிக்கெட் கட்டணம் 33 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு கோவிட் நிலைமை வருவதற்கு முன்பு, கோடைகால விமானங்களில் டிக்கெட்டின் சராசரி கட்டணம் 1362 டொலர்களாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது 1817 டொலராக உயர்ந்துள்ளது.
இது மெல்போர்னிலிருந்து புது டெல்லி, சிட்னியில் இருந்து டென்பசார் – மெல்போர்னில் இருந்து டென்பசார் – சிட்னியில் இருந்து ஹோ சி மின் மற்றும் சிட்னியில் இருந்து மணிலா செல்லும் விமானங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டண அதிகரிப்பாகும்.
ஏறக்குறைய அனைத்து கோவிட் விதிமுறைகளும் நீக்கப்பட்டதால், இந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் விடுமுறைக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களின் சதவீதம் 164 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மெல்போர்ன் மற்றும் சிட்னியில் இருந்து குறிப்பாக டெல்லி – பேங்கொக் – சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளுக்கான டிக்கெட் முன்பதிவு இம்முறை கணிசமாக அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.