Newsஉக்ரைனில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலியா படை? போர் மேலும் தீவிரமடையும் அபாயம்

உக்ரைனில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலியா படை? போர் மேலும் தீவிரமடையும் அபாயம்

-

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி படையெடுத்து 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவையும் அந்த நாட்டால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம், சனிக்கிழமை நடத்தப்பட்ட லொரி குண்டுவெடிப்பில் சேதப்படுத்தப்பட்டது.

இதனால், அந்தத் தீவுடன் ரஷ்யாவுக்கு இருந்த ஒரே சாலை வழி விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏவுகணை மூலம் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் உயிரிழந்தனர்.

மேலும், ரஷ்யாவுடனான போரில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கவோ சரணடையவோ போவதில்லை. தொடர்ந்து போரிடுவோம் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைன் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்க அந்நாட்டு அரசு ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ‘உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு போர் பயிற்சி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதுகுறித்து விரைவாக முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Latest news

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலைக் கழுகு தேர்வு

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா். வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்”...

முதல் முறையாக வெளிநாடு செல்லும் காதலர்களுக்கான அறிவுரை

மனைவியுடன் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் வழிகாட்டிகளை 'சிஎன் டிராவலர்' வெளியிட்டுள்ளது என்பதும் சிறப்பு. அதன்படி, அவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப்...

விக்டோரியாவில் உள்ள நீரில் கண்டறியப்பட்டுள்ள ஒரு அசாதாரண வைரஸ்

விக்டோரியாவில், எங்கள் நீரில் ஒரு அசாதாரண வைரஸ் போக்கு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் நடத்தப்பட்ட வழக்கமான கழிவுநீர் மாதிரி சோதனையின் போது இது...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

சாதனை படைத்தது MCG-யின் முதல் நாள் வசூல்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) 26ம் திகதி தொடங்கிய Boxing Day டெஸ்ட் போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அதன்படி, முதல் நாளில் Boxing Day...