விக்டோரியா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணம் வழங்குவதற்காக 14 பேரிடர் நிவாரண சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளுக்காக 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள் ஏற்கனவே பல குறிப்பிடத்தக்க பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், விக்டோரியா வடக்கு ரோசெஸ்டர் பகுதியில் வெள்ளத்தில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது விக்டோரியா மாநிலத்திற்கான அனைத்து விழிப்பூட்டல்களும் https://twitter.com/vicemergency இந்த டுவிட்டர் இணைப்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.