Newsஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

-

ஆஸ்திரேலியாவில், சிட்னியில் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 28 வயதான இந்திய பட்டதாரி மாணவர் சுபம் கார்க் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 6ஆம் திகதி அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 11 முறை கத்தியால் குத்தியதில் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவைச் சேர்ந்த சுபம் கார்க்கின் பெற்றோர், கடந்த 7 நாள்களாக, ஆஸ்திரேலியா செல்ல விசா பெற முயன்றும் இதுவரை எந்த பலனும் இல்லை.

சுபம் கார்க், சென்னை ஐஐடியில் முதுகலை பட்டம் பெற்று, கடந்த செப்டம்பர் முதலாம் திகதிதான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

சுபம் குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், முகம், நெஞ்சுப் பகுதி மற்றும் வயிறு என 11 இடங்களில் மிகமோசமான கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இதில் தொடர்புடைய 27 வயது நபர் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...