ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
விக்டோரியாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கும் அதன் தலைநகர் மெல்பர்னுக்கும் அவர் செல்லவிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் தொடர் கனத்தமழை காரணமாக 3 மாநிலங்களில் வெள்ளம் நீடிக்கிறது.
பயணத்தின்போது விக்டோரிய மாநில முதலமைச்சர் டேனியல் ஆன்ட்ரூசைச் சந்தித்துவிட்டு நெருக்கடிகால நிலையத்திற்கும் அதன்பிறகு மெல்பர்னுக்கும் தாம் செல்லவிருப்பதாக ஆல்பனீசி தெரிவித்தார்.
விக்டோரியாவில் வெள்ளத்தில் நிகழ்ந்த முதல் மரணம் குறித்த தகவல் நேற்று (15 அக்டோபர்) அறிவிக்கப்பட்டது.
மெல்பர்னுக்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரோசெஸ்டரில் (Rochester) வெள்ளநீரில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.