குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதன் கீழ் 116,000 மெகா லிட்டர் தண்ணீர் விடப்படும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் அறிவித்தது.
தற்போது அணையில் 90 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளதால் அதை 80 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அடுத்த 02 வாரங்களுக்கு குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களிடமிருந்து தண்ணீர் கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என்றும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, அவர்களிடம் சுமார் 55 டொலர்கள் மீதம் இருக்கும்.
Brisbane, Redlands, Logan, Gold and Sunshine Coast, Noosa, Ipswich, Lockyer Valley, Somerset, Scenic Rim மற்றும் Moreton Bay பகுதிகளில் உள்ள சுமார் 14 லட்சம் பேர் அந்தச் சலுகையைப் பெறவுள்ளனர்.