ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அடுத்த வருடத்திலும் தொடரும் என சமூக சேவைகள் அமைச்சர் Amanda Rishworth எச்சரித்துள்ளார்.
உலகப் பொருளாதாரப் பிரச்சனைகள் – வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு வரவு செலவு திட்டங்களைக் கொண்டு வருவது கடினம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
முந்தைய தாராளவாத அரசாங்கம் வாங்கிய கடனில் தற்போதைய அரசாங்கம் ஒரு டிரில்லியன் டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் குழந்தை பராமரிப்புக் கட்டணங்கள் மற்றும் பல வகையான மருந்துகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என சமூக சேவைகள் அமைச்சர் அறிவித்துள்ளார்.
சம்பளத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு காலத்தை 04 வருடங்களின் பின்னர் 26 வாரங்களாக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானமும் நல்லதென அவர் மேலும் தெரிவித்தார்.