Newsகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

-

கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி வெள்ளி – சனி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டார்ஹாம் பொலிஸ் தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ தமிழ் வட்டாரங்களின் தகவலின் படி உயிரிழந்தவர் அருண் விக்னேஸ்வரராஜா என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

இவர் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்றும் தமிழ்த் தேசிய விளையாட்டு அணிகளில் துடிப்புடன் பங்குபற்றி வந்தவர் எனவும் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அஜாக்ஸ் (Ajax) என்ற இடத்தில் உள்ள கிங்ஸ்கஸ்ரில் அருந்தகத்துக்கு (King’s Castle Bar and Grill) வெளியே வாகனத் தரிப்பிடத்தில் இருவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு காரில் ஏறித் தப்பிவிட்டார் என்றும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

கடுமையான வெட்டுக் காயங்களுடன் ரெறென்ரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருண் விக்னேஸ்வரராஜா அங்கு பின்னர் உயிரிழந்தார். அவரை வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற நபரைப் பொலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை.

கத்தி வெட்டுச் சம்பவம் இடம்பெற்ற அதேநேரத்தில் அருந்தகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் சாரதி ஒருவர் தனது காரை வேகமாகச் செலுத்தி நபர் ஒருவரை மோதிப்படுகாயப்படுத்தியுள்ளார்.

அவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். படுகாயங்களுக்கு உள்ளானவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டுவருவதாக

டார்ஹாம் பிராந்தியப் பொலிஸ் தெரிவித்துள்ளது. சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அதனைத் தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...