விக்டோரியா மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் வெள்ளம் காரணமாக தற்காலிக தங்குமிடங்களுக்குச் சென்றவர்களின் வீடுகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளது.
மவுண்ட் ஹெலன் பகுதியில் மட்டும் கார்களை சேதப்படுத்திய 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக விக்டோரியா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெல்போர்னின் பல புறநகர்ப் பகுதிகளில் இதே போன்ற சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளன.
இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.