Cinemaமீண்டும் தயாரிப்பாளர் - பூரிப்பில் 'பூங்குழலி' ஐஸ்வர்யா லட்சுமி

மீண்டும் தயாரிப்பாளர் – பூரிப்பில் ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி

-

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சமுத்திரகுமாரி ‘பூங்குழலி’ கேரக்டரில் நடித்த மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார்

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இவர், ‘கார்கி’ என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தற்போது உற்சாகமாக காணப்படுகிறார்.

மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில், ” செப்டம்பர் 30-ம் திகதி அன்று மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது.

தற்போது ‘அம்மு’ என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்று அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று ‘குமாரி’ என்ற மலையாள படமும் வெளியாகிறது. ‘கார்கி’ படத்தைத் தொடர்ந்து, ‘குமாரி’ படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறேன். முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்து, நடித்திருக்கும் ‘குமாரி’ திரைப்படம் இதுவரை வெளிவராத ஜானர் என்றும், புராண இதிகாசம் தொடர்புடைய திரில்லர் திரைப்படம் என்றும் தகவல்கள் வெளியாகி இருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே எழுந்திருக்கிறது.

‘குமாரி’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக உற்சாகத்துடன் தெரிவிக்கும் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான ஐஸ்வர்யா லட்சுமி, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் பூங்குழலியாக நடித்ததற்கு கிடைத்த வரும் பாராட்டுக்கள் எதிர்பாராதவை என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

‘பூங்குழலி’, ‘அம்மு’, ‘குமாரி’ என ஒரே மாதத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தியிருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு சக கலைஞர்களும், மூன்று மொழி திரையுலகினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Latest news

ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்

கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கும் யோசனையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக...

விமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை

டிசெம்பர் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்த சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மெல்பேர்ன் நீதிமன்றம்...

விக்டோரிய இளைஞர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி

விக்டோரியாவில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் புதிய ஓட்டுநர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. My Learners Free Lesson...

மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நாட்களாக காணாமல் போன ஆஸ்திரேலிய இளைஞர்

நியூ சவுத் வேல்ஸில் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக காணாமல் போன மலையேறுபவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்னோவி மலைப் பகுதியில் உள்ள கோஸ்கியுஸ்கோ...

2030-இல் மாற்றமடையும் அதிக தேவையுடைய வேலைத் துறைகள்

2030ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் அதிக தேவையுடைய வேலைத் துறைகள் மாறும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி, 2030 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டெலிவரி டிரைவர்கள்,...

எதிர்காலத்தில் பல ஆஸ்திரேலியா பாதுகாப்பு விசாக்கள் நிராகரிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள்

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் Protection Visa (subclass 866) தொடர்பாக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான Protection Visa (subclass 866)...